SRH vs LSG | குருணால் பாண்டியாவின் அசாத்திய ஷாட்டை காணாமல் அடித்த ஹெட், அபிஷேக்!

By ஆர்.முத்துக்குமார்

ஹைதராபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 57-வது போட்டி அசாத்தியமான, திகைப்பூட்டும் ஷாட்களின் கண்காட்சியாக அமைந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அடைந்த தோல்வி வாழ்நாள் தோல்வியாகும். சஞ்சய் கோயங்காவே கடுப்பாகி கேப்டன் ராகுலிடம் பேச வேண்டிய நிலையைத் தோற்றுவித்தவர்கள் எதிரணி வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா.

58 பந்துகளில் 167 ரன்கள் விரட்டப்பட்டது. இதில் 14 டாட் பால்கள் (ரன் எடுக்காத பந்துகள்). மொத்தம் 14 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள். 148 ரன்கள் பவுண்டரி சிக்ஸர்களிலேயே வந்து விட்டது. சிங்கிள், இரண்டு என்பது ஏறக்குறைய இல்லாத மேட்ச் ஆகிவிடும் போல் தெரிந்தது. இதில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆடிய ஷாட்கள் உண்மையில் திகைப்பூட்டும் ரகத்தை சேர்ந்தவை.

ஆனால், இந்த அதிரடிக்கு முன்பாக இதைத் தன் பந்து வீச்சு மூலம் மேடை அமைத்துக் கொடுத்தவர் புவனேஷ்வர் குமார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். பவுண்டரிகள் கொடுக்கவில்லை. 12 டாட் பால்கள். பாட் கம்மின்ஸும், நடராஜனும் 8 ஓவர்களில் 97 ரன்கள் சாத்து வாங்கிய பிட்சில் புவனேஷ்வர் குமார் அற்புதத்தின் உச்சமாக வீசியதையும் பாராட்டியே ஆக வேண்டும்.

இருப்பினும் ஷாட்களின் திருவிழாவாக அமைந்தது இந்த ஆட்டம். குருணால் பாண்டியா லக்னோ அணியின் மந்தத் தன்மையைப் போக்கும் மருந்தாக ஜெயதேவ் உனத்கட் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இது நடப்பு சீசனின் 999 மற்றும் 1000-மாவது சிக்ஸர்களாகும்.

இந்த 2 சிக்ஸர்களில் ஒன்று மகா அற்புதமான ஷாட். தலை உயரம் வந்த ஸ்லோ பவுன்சரை நேராக ஹூக் செய்தார். அதாவது நேர் பவுண்டரிக்கு ஹூக் ஆட முடியுமா? பலர் ஆடியுள்ளனர், முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், ஒருமுறை தென் ஆப்பிரிக்காவின் மகாய நிட்டினியை இப்படி ஸ்ட்ரெய்ட் ஹூக் சிக்ஸர் அடித்தார்.

நம் நாட்டில் ராபின் உத்தப்பா, ஒருமுறை ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ வீசிய பந்தை அதே போல் ஒரு ஸ்ட்ரெய்ட் ஹூக் சிக்ஸர் விளாசியுள்ளார். அந்த வரிசையில் குருணால் சிக்சர் அமைந்தது. ஆனால், இந்த ஷாட் கூடிய விரைவில் நிழலுக்குள் தள்ளப்படும் என்பதை அப்போது அவரும் அறிந்திருக்க மாட்டார்.

ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 80 ரன்கள், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்கள். லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கவுதம் ஓவருக்கு 14.50 ரன்கள் கொடுத்தது சிக்கனமான பந்து வீச்சு என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

ட்ராவிஸ் ஹெட்டின் ஷாட்களில் மண்டியிட்டபடி நேர் ஸ்க்ரீனுக்கு அடித்த ஷாட் அதிர்ச்சி ரகம். அதே போல் அபிஷேக் சர்மா, பதோனியின் ஆஃப் ஸ்பின்னை மிக அருமையாக வைடு லாங் ஆன் மேல் தூக்கிய சிக்ஸர் இன்னொரு ஆச்சரிய ரகம். இதே அபிஷேக் வின்னிங் ஷாட்டாக எக்ஸ்ட்ரா கவர் மேல் அடித்த சிக்ஸரும் திகைப்பு ரகம்.

ஆனால், இவை அனைத்துக்கும் மேலாக ட்ராவிஸ் ஹெட், ரவி பிஷ்னோய் பந்தை பின்னால் சென்று லாங் ஆஃப் மேல் அடித்த சிக்ஸ், எப்படி இது, என்ன இது என்பது போன்ற ஆச்சரியக் குறிப்புகளை நம்மில் எழுப்பிய அசாத்திய ஷாட். டெரிக் அண்டர்வுட்டை ஒருமுறை மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் பேக் ஃபுட்டில் நேராக சிக்ஸ் அடித்ததுதான் நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகக் கடினமான ஷாட். இப்போது ட்ராவிஸ் ஹெட் அந்த ஷாட்டை ஆடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்