டாஸ் தோற்றது நல்லதாயிற்று, நாங்களும் முதலில் பவுல் செய்யவிருந்தோம்: வின்னிங் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர்

By இரா.முத்துக்குமார்

கவுதம் கம்பீர் கேப்டன்சியைத் துறந்ததையடுத்து அவரை உட்கார வைத்து விட்டு ஆடிய, கம்பீரால் பரிந்துரை செய்யப்பட்ட, கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், டெல்லி அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் அதிரடி இன்னிங்சை ஆடி 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு இட்டு சென்றார்.

கொல்கத்தா அணி ஆட்டத்தின் எந்த நிலையிலும் வெற்றி பெறுமாறு இல்லை, கடைசியில் 64 ரன்கள் இடைவெளியில் தோல்வி கண்டது.

ஆட்ட நாயகனாக தன் கேப்டன்சி முதல் போட்டியிலேயே தேர்வு செய்யப்பட்ட வெற்றி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், போட்டி முடிந்து கூறியதாவது:

பேருணர்வுதான். அதுவும் கேப்டனாக முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது பேருணர்ச்சியை அளிக்கிறது. நான் மட்டுமல்ல அனைவருமே பங்களிப்பு செய்தனர்.

உண்மையில் டாஸ் தோற்றது நல்லதாகப் போய்விட்டது. ஏனெனில் டாஸ் வென்றிருந்தால் நாங்கள் முதலில் பவுலிங் செய்வதாகவே இருந்தோம். ஆனால் முதலில் பேட் செய்த போது எங்களை நாங்கள் வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் கிடைத்தது.

கடந்த 90 ரன்கள் இலக்கை விரட்டும் போது வந்தது, தற்போது இலக்கை நிர்ணயிக்கும் போது வந்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களுமே திருப்திகரமானது. இந்த சீசன் தொடங்கியது முதல் பிரித்வி ஷா அபாரமாக ஆடி வருகிறார். அவர் ஆடும் விதம் பார்க்க அருமையாக இருக்கிறது.

இவருடன் இணைந்து கொலின் மன்ரோ எங்களுக்கு 50 ரன்கள் கூட்டணி அமைத்துக் கொடுத்தனர். பவுலிங் வரிசையில் பந்தை ஒருவர் கையில் தயங்காமல் கொடுக்க முடியும் என்றல் அது பிளங்கெட்தான். அதுவும் என்னிடம் வந்து 16 மற்றும் 17வது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று கூறியது நெகிழ்ச்சியானது. ஒரு மூத்த வீரரிடமிருந்து இந்த அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பானது.

இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்