ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.065 நிகர ரன் ரேட்டுடன்4-வது இடத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.371 நிகர ரன் ரேட்டுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் ஹைதராபாத் அணியின் 3-வது தோல்வியாக இது அமைந்தது. எதிரணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தக்கூடிய அபாயகரமான பேட்டிங் வரிசையை ஹைதராபாத் அணி கொண்டிருந்தாலும், அந்த அணி தோல்வியை சந்தித்த ஆட்டங்களில் முன்னணி பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம் அடைந்தது தோல்விக்கு பிரதானமான காரணமாக அமைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது தாக்குதல் ஆட்டத் திறனால் வலுவான இலக்கை கொடுக்கத் தவறியது. அந்த ஆட்டத்தில் டாப் ஆர்டரில் டிராவிஸ் ஹெட்டை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறினர். இறுதிக்கட்ட ஓவர்களில் பாட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 35 ரன்களை விளாசியதால் சற்று கவுரவமான ஸ்கோரை கொடுக்க முடிந்திருந்தது. தனது தாக்குதல் ஆட்டத் திறனால் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் சர்மா, கடந்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே 30 ரன்களை எட்டினார்.
» சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்: ராஜஸ்தானை 20 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் @ ஐபிஎல்
» டெல்லி ஓபனர்கள் அதிரடி: ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
மேலும் நடுவரிசையில் ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் ரெட்டி ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படாததும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. அதேவேளையில் அந்த அணியின் பந்து வீச்சு கடந்த சில ஆட்டங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது. நடராஜன் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளையில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
இன்றைய ஆட்டம் உட்பட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஏற்கெனவே புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் இரு இடங்களில் வலுவாக உள்ளன. இந்த இரு அணிகளும் ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றை எட்டுவது உறுதியாகி உள்ளது. இதனால் மீதம் உள்ள இரு இடங்களுக்குள் செல்ல வேண்டுமானால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டும்.
இதே நிலைமையில்தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் உள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 235 ரன்களை தாரை வார்த்திருந்தது. ஏகானா மைதானத்தில் முதன்முறையாக 200 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்திய லக்னோ அணியானது 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது.
அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று விளையாட தவறிய நிலையில் மார்கஸ் ஸ்டாயினிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தேவையான நேரத்தில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளவில்லை. தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, அஷ்டன் டர்னர், கிருனல் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுக்கத் தவறினர். பந்து வீச்சில் மயங்க் யாதவ் இல்லாதது அணியின் சமநிலையை பாதித்துள்ளது. தற்போது மோஷின் கானும் காயம் அடைந்துள்ளது பலவீனத்தைஅதிகரித்துள்ளது. இதனால் நவீன் உல் ஹக், யாஷ் தாக்குர், ஸ்டாயினிஸ், கிருனல் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago