டெல்லி ஓபனர்கள் அதிரடி: ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

டெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 221 ரன்களை குவித்துள்ளது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் ஓபனர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் - ஜேக் ஃப்ரேசர் இணை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. அதிலும் குறிப்பாக ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட்.

அக்சர் படேல் 15 ரன்களில் கிளம்ப, அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் 65 ரன்களில் விக்கெட்டானார். ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 156 ரன்களைச் சேர்த்திருந்தது.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - குல்பாடின் நையிப் இணைந்து ஸ்கோரை ஏற்ற முயற்சித்தனர். ஆனால், குல்பாடின் 19 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்