மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளைப் பதிவு செய்து 12 புள்ளிகளைப் பெற்று உள்ளது.
ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன், நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோர் தொடர்ச்சியாக உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் இந்த ஆட்டத்தில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆட்டத்தில் நிதீஷ் ரெட்டியும், ஹென்ரிச் கிளாசனும் அதிரடியாக விளையாடியதால் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி காண நேரிட்டது. நிதீஷ் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்களையும், கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர்.
அதேபோல் பவுலிங்கில் டி. நடராஜன், புவனேஸ்வர் குமார், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். எனவே, இந்த ஆட்டத்திலும் அவர்களிடமிருந்து மிகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படக்கூடும்.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 3-ல் வெற்றி, 8-ல் தோல்வி பெற்று 6 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
கடைசியாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்விகளை அந்த அணி பதிவு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான கடந்த ஆட்டத்தில் அந்த அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
170 ரன்கள் என்ற வெற்றி இலக்கைக்கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. ரோஹித் சர்மா, இஷான் கிஷன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் போன்ற மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தும் குறைந்த அளவிலான இலக்கைக் கூட எட்ட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை உள்ளது.
எனவே இந்த ஆட்டத்தில் ரோஹித், சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணியின் வெற்றிக்குத் தடை போடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் பந்துவீச்சிலும் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. பந்துவீச்சில் துஷாராவும், பும்ராவும் மட்டுமே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கின்றனர். எனவே, அவர்களிடமிருந்து உயர்மட்ட செயல்திறனை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோன நிலையில் இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago