‘50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்’ - தோல்விக்கு பிறகு ருதுராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தது.

“நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரையில் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பேட் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏதுவாக இல்லை. அதன் தன்மை பின்னர் மாறியது.

பயிற்சியின் போது டாஸ் வீசி பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால், களத்தில் டாஸை இழக்கிறேன். அதனால் நான் டாஸுக்கு வரும்போது அழுத்தமாக உணர்கிறேன்.

கடந்த போட்டியில் இதே ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை நாங்கள் வீழ்த்தியது சர்ப்ரைஸ். கடந்த இரண்டு போட்டிகளில் ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. 200+ ரன்கள் குவித்து களத்தில் எதிரணிக்கு சவால் கொடுத்தோம். இந்தப் போட்டியில் 180 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது.

காயம் காரணமாக தீபக் சஹர் முதல் ஓவரில் வெளியேறியது சிக்கலானது. விக்கெட் வீழ்த்த வேண்டிய தருணத்தில் இரண்டு பவுலர்கள் மட்டுமே இருந்தனர். பனிப்பொழிவு காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவால் ஏற்பட்டது. இது கடினம் தான். ஆனால், எங்களுக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்ப நாங்கள் முயற்சிப்போம்” என ருதுராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE