மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து இன்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்படி, தற்போது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷப் பந்த்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இதேபோல் மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
» 9 வீரர்கள் நிச்சயம் எனும் போது டி20 உ.கோப்பையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அரிது!
» “நீ எதுவாக இல்லையோ, அதுவாக ஆக முயற்சிக்காதே” - பாக். அணிக்கு கில்லஸ்பி அட்வைஸ்
அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியின் விவரம்: ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago