சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்ய ரஹானே ஓப்பனிங் செய்தனர். இதில் ரஹானே 12 பந்துகளிலேயே 9 ரன்களிலேயே ஷபாஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரி மிட்செல் நிதானமாக ஆடி ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய ஷிவம் துபே, எதிரில் இருந்த ருதுராஜ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ருதுராஜ் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மூன்று சிக்ச்ஸர்கள், பத்து பவுண்டரிகள் என விளாசி 98 ரன்கள் எடுத்தார். சதம் அடித்திருக்க வேண்டிய நிலையில் 19.2வது ஓவரில் சிக்ஸர் விளாச முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.
» CSK vs SRH | ருதுராஜ் அதிரடியில் சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல்
» GT vs RCB | 201 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டிய ஆர்சிபி; வில் ஜேக்ஸ் அதிரடி ஆட்டம்!
இறுதி ஓவரில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பின் இடையே இறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்திருந்தது. தோனி, துபே இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
213 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் ஓப்பனர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவருமே முறையே 13 மற்றும் 15 ரன்களில் வெளியேறினர்.
இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் டக் அவுட் ஆகி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஸ்கோரை ஏற்ற உதவினார். எனினும் பத்தாவது ஓவரில் பதிரானா வீசிய பந்து மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.
அடுத்து இறங்கிய நிதிஷ் குமார் 15 ரன்கள், கிளாசன் 20 ரன்கள், அப்துல் சமத் 19 ரன்கள், ஷபாஸ் அஹமது 7 ரன்கள், பேட் கம்மின்ஸ் 5 ரன்கள், உனட்கட் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே 18.5 ஓவர்களில் அணியில் அனைவரும் ஆல் அவுட் ஆகினர். 213 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 134 ரன்களில் சுருண்டது. 78 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago