லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடந்த 44வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங் தேர்வு செய்தது. குயிண்டன் டி காக், கே.எல்.ராகுல் இணை ஓப்பனிங் இறங்கிய நிலையில், குயிண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாயினிஸ் பூஜ்ஜியத்தில் வெளியேற லக்னோவின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக அமைந்தது.
தீபக் ஹூடா மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். 50 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடாவை அஸ்வின் விக்கெட்டாக்கினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 76 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தனர். இருவருமே தலா 18 ரன்களில் முறையே 34 மற்றும் 24 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை கொடுத்து வெளியேறினர்.
» IPL 2024 | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் - லக்னோ 196 ரன்கள் குவிப்பு
» திலக் வர்மா போராட்டம் வீண் - மும்பையை வென்றது டெல்லி @ ஐபிஎல்
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 33 பந்துகளுக்கு 71 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ரியான் பராக் 14 ரன்கள், துருவ் ஜுரேல் 52 ரன்கள் என கொடுக்கப்பட்ட இலக்கை 19 ஓவர்களில் தாண்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago