அரசுப்பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இடஒதுக்கீடு: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுமென நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற, 5 மாநிலத்தை சேர்ந்த 18 வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் நேற்று காலை, ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை சந்தித்தனர்.

அப்போது முதல்வர் கே. சந்திரசேகர ராவுடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, “காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, நமது நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய வீரர், வீராங்கனைகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இவர்களுக்கு வரும் 23ம் தேதி (நாளை) ஹைதராபாத்தில் மாபெரும் விழா நடத்தப்பட்டு, கவுரவிக்கப்பட உள்ளனர். விளையாட்டு வீரர்களை வருங்காலங்காலங்களிலும் ஊக்குவிக்க, இனி தெலங்கானா மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் இவர்களுக்காக 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்