3.2 ஓவர்கள், 0 ரன், 7 விக்கெட்டுகள்: டி20-ல் இந்தோனேசிய வீராங்கனை தனித்துவ சாதனை!

By செய்திப்பிரிவு

பாலி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்துள்ளார் இந்தோனேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் 17 வயது வீராங்கனை ரோமாலியா. மங்கோலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 3.2 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான் அவர் படைத்துள்ள சாதனை.

பாலி பேஷ் சர்வதேச மகளிர் டி20 தொடரில் இந்தோனேசியா மற்றும் மங்கோலியா அணிகள் விளையாடின. இந்த தொடரின் 5-வது டி20 போட்டியில் இந்தோனேசியா அணியில் அறிமுக வீராங்கனையாக விளையாடினார் ரோமாலியா. இதில் டாஸ் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது அந்த அணி. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மங்கோலியா விரட்டியது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி.

11-வது ஓவரில் பந்து வீச வந்தார் ஆஃப் ஸ்பின்னரான ரோமாலியா. அவர் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தினார். அதே ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 13 மற்றும் 15-வது ஓவரில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17-வது ஓவரில் 1 விக்கெட் வீழ்த்த ஆட்டத்தை வென்றது 127 ரன்களில் வென்றது இந்தோனேசியா. இந்தப் போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.

அவர் வீசிய 20 பந்துகளில் எதிரணி ரன் ஏதும் எடுக்கவில்லை. 3.2 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி சாதனை படைத்தார். இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். ஆனால், ரன் ஏதும் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறை. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்