“அணியாக நம்பிக்கை பெற வெற்றி அவசியம்” - ஆர்சிபி கேப்டன் டூப்ளசி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விக்கு விடை கொடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 35 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு ஆர்சிபி கேப்டன் டூப்ளசி தெரிவித்தது. “கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 270+ ரன்கள் குவித்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் எடுத்தோம். கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1 ரன்னில் ஆட்டத்தை இழந்தோம்.

நாங்கள் வெற்றியை நெருங்கினோம். ஆனால் ஒரு அணியாக நம்பிக்கையை பெற போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இன்று இரவு நாங்கள் அனைவரும் நிம்மதியாக உறங்குவோம். உங்களது கள செயல்பாடுகள் தான் நம்பிக்கை தரும். பேசியோ அல்லது போலியாகவோ நம்பிக்கையை பெற முடியாது.

இந்த தொடரில் போட்டியிடும் அணிகள் வலுவானவை. களத்தில் 100 சதவீத செயல்பாடு இல்லை என்றால் அதன் முடிவுகள் வேதனை தரும். இப்போது அணியில் அதிகம் பேர் ரன் சேர்க்கிறார்கள். முதல் பாதியில் விராட் கோலி மட்டுமே ரன் குவித்து வந்தார். பெங்களூரு - சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீசுவது கடினமானது” என அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்த ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்