DC vs GT | குஜராத் டைட்டன்ஸை 4 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 ரன்களில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. அந்த கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷனுடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாஹா. 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சாஹா. அஸ்மதுல்லா ஓமர்சாய் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் தெவாட்டியா ஆகியோர் ஸ்வரப் ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த டேவிட் மில்லர் 18-வது ஓவரில் அவுட் ஆனார். சாய் கிஷோர் 2 சிக்ஸர்கள் விளாசி 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரஷித் கான் இருந்தார். அந்த ஓவரை முகேஷ் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

ஐந்தாவது பந்தில் சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தில் குஜராத் அணியின் ரன் எடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் அணி. அதன் மூலம் 4 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 19-வது ஓவரில் டெல்லி அணியின் ஸ்டப்ஸ், பவுண்டரி லைனில் அபாரமாக செயல்பட்டு ஒரு சிக்ஸரை தடுத்தார். வெறும் ஒரு ரன் மட்டுமே அந்த பந்தில் குஜராத் அணி எடுத்தது. ஸ்டப்ஸ் தடுத்த அந்த 5 ரன்கள் குஜராத் அணியின் வெற்றியை பறித்தது என்றும் அதை சொல்லலாம். டெல்லி அணி வீரர்கள் ஃபீல்டிங் பணியை சிறப்பாக செயல்பட்டனர்.

கடைசி ஓவரில் மோகித் சர்மாவுக்கு ரஷித் கான் ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பந்த் வென்றார். இந்த போட்டிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 4 வெற்றிகளுடன் முறையே 5, 6, 7 ஆகிய இடங்களில் ரன் ரேட் அடிப்படையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்