லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்னிங்ஸில் 176 ரன்களை சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா அரைசதம் விளாசினார்.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 2ஆவது ஓவரிலேயே டக்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 4வது ஓவரில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 51 ரன்களைச் சேர்த்தது.
ஓரளவுக்கு ஆடிய அஜிங்க்ய ரஹானேவை 9ஆவது ஓவரில் போல்டாக்கினார் கிருணல் பாண்டியா. 36 ரன்களில் ரஹானே அவுட். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக தடுமாறிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை சேர்த்தது.
ஸ்கோரை ஏற்றும் முயற்சியில் மொயின் அலி 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினாலும் அதற்கு அடுத்த பந்தே 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7ஆவது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி.
» சிஎஸ்கே போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை
» கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 11-வது சுற்றில் விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா தோல்வி
அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே உற்சாகமடைந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது. ஜடேஜா 57 ரன்களுடனும், தோனி 28 ரன்களுடனும் விக்கெட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி தரப்பில், கிருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாயினிஸ், மொஹ்சின் கான், யஷ் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago