ஜேசன் ஹோல்டரின் சிறந்த கிரிக்கெட் அணியில் ஒரே இந்திய வீரர் சச்சின்; முரளிதரன், திராவிட், கும்ப்ளே எங்கே?

By ராமு

மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தனக்குப் பிடித்த அனைத்து கால சிறந்த கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ளார், அதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியா தரப்பில் இடம்பெற்றுள்ளார்.

இதில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் இடம்பெறாதது ஆச்சரியமே. அதே போல் அப்போதைய புதிர் ஸ்பின்னராக விளங்கிய அனில் கும்ப்ளே இவர் 600 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார், இவரும் இடம்பெறவில்லை. தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டோனால்டு இல்லை, மகாயா என்டீனி இல்லை, மாறாக டேல்ஸ்டெய்ன் இவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

உலகின் மிகச்சிறந்த ஒரே இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் இடம்பெறாததும் ஆச்சரியமே, வாசிம் அக்ரம் இவர் மீது தாக்கம் செலுத்தவில்லை என்பதும் பவுலர் என்ற முறையில் விசித்திரமானதே.

ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, ஜாக் காலிஸ் ஆகியோர் பேட்டிங்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேத்யூ ஹெய்டன், குமார் சங்கக்காரா ஆகியோரை தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தன் மீது தாக்கம் செலுத்தியவர்கள் என்ற அடிப்படையில் அவர் இந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம் வருமாறு:

மேத்யூ ஹெய்டன், சங்கக்காரா, ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், டேல் ஸ்டெய்ன், கர்ட்லி ஆம்புரோஸ், கிளென் மெக்ரா.

(ஏ.என்.ஐ. தகவல்களுடன்..)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்