லண்டன்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறந்து விளக்குவதற்கு தேவையான அதீத திறனை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கொண்டுள்ளதாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் தெரிவித்துள்ளார்.
“நடப்பு ஐபிஎல் சீசனில் பல புதிய இந்திய வீரர்களின் எழுச்சியை நாம் பார்த்து வருகிறோம். அவர்கள் தங்களது ஆட்டத்திறன் மூலம் முத்திரை படைத்து வருகின்றனர். கிரிக்கெட் வாரியம் அணி தேர்வில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியம். ஏனெனில், சிறந்து விளங்குவதற்கான அதீத திறனை இந்தியா கொண்டுள்ளது.
மேலும், விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சற்று விலகியே உள்ளார். இருந்தாலும் அவரது ஐபிஎல் செயல்பாட்டின் காரணமாக அணியில் இடம் பிடிப்பதற்கான வலுவான போட்டியாளராக திகழ்கிறார் என்பதை மறுப்பதற்கு இல்லை” என மலான் தெரிவித்துள்ளார்.
» மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை
» திகிலூட்டும் காட்சிகள்... அறிவழகன் - ஆதி கூட்டணியில் ‘சப்தம்’ டீசர் எப்படி?
நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டிகள். குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன. ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago