மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 10-வது சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மும்பை சிட்டி எப்சி, மோகன் பகான் எஸ்ஜி, ஒடிசா எப்சி, கோவா எப்சி,கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, சென்னையின் எப்சி ஆகிய 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
3 முதல் 6-வது இடத்தை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடும். இதில் இருந்து இரு அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் தேதிகளை போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி மே 4-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. 19 மற்றும் 20-ம்தேதிகளில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 3 முதல் 6-வது இடங்களை பிடித்த அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர்ந்து அரை இறுதிசுற்றின் முதற்கட்ட ஆட்டங்கள் 23 மற்றும் 24-ம் தேதிகளிலும் அரை இறுதி சுற்றின் 2-வது கட்ட ஆட்டங்கள் 28 மற்றும் 29-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago