ஹைதராபாத் பிட்ச் ரன் குவிப்பு பிட்சாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் கரிய நிறத்தில் ஸ்லோ பிட்ச் ஆக நேற்று அமைந்தது, இதனால் சிஎஸ்கேவுக்கு சாதகமாகவே பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் சிஎஸ்கேவின் பேட்டிங், பவுலிங் எல்லாமே சொதப்பலாக சன் ரைசர்ஸ் எளிதான வெற்றியைப் பெற்றது.
சிஎஸ்கேவுக்கு இரண்டு பின்னடைவுகள் ஏற்பட்டது, ஒன்று ஸ்லோ கட்டர்களை அற்புதமாக வீசும் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாதது. இன்னொன்று நல்ல வேகத்தில் முன்னேற்றம் கண்ட மதீஷா பதிரனாவும் இல்லாதது.
மும்பைக்கு எதிராக செம்மண் பிட்சைப் போட்டு 277 ரன்களைக் குவித்தது அன்று ஹைதராபாத் அணி. நேற்று கரிய பிட்ச், பந்துகள் மெதுவாக மட்டைக்கு வந்தன. அதுவும் சன் ரைசர்ஸ் பவுலர்கள் ஸ்லோ கட்டர்களை திறம்படப் பயன்படுத்தினர். பாட் கமின்ஸ், நடராஜன் என்று ஸ்லோ கட்டர்கள் அடுத்தடுத்து சென்னை பேட்டிங் ரிதமையே காலி செய்தது (அப்படி ஒரு ரிதம் அந்த அணிக்கு இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால்).
சிஎஸ்கேவை 165/5 என்று மட்டுப்படுத்திய கையோடு பிட்ச் மேலும் மந்தமாகும் என்பதை அறிந்து அபிஷேஷ் சர்மா, அய்டன் மார்க்ரம், ட்ராவிஸ் ஹெட் கூட்டணி பவர் ப்ளேயில் 78 ரன்களைக் குவித்து பவர் ப்ளேயிலேயே மேட்சை முடித்துவிட்டது. மாறாக சன் ரைசர்ஸின் நசுக்கு பந்து வீச்சில் சிஎஸ்கே பவர் ப்ளேயில் 48 ரன்களையே எடுக்க முடிந்தது. கடைசி 5 ஓவர்களிலும் சிஎஸ்கே பேட்டர்கள் சோபிக்கவில்லை.
» மராகேச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்: அரை இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி
» ஜெர்மன் ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதியில் வேலவன் செந்தில்குமார்
கடைசி 7 ஓவர்களில் சிஎஸ்கே வெறும் 50 ரன்களையே எடுக்க முடிந்தது. கமின்ஸ், நடராஜன், உனாட்கட் மூவரும் பந்தின் வேகத்தை குறைத்து நக்கிள் பந்துகளை வீசி சிஎஸ்கேவின் பேட்டர்களை முடக்கினர். சிஎஸ்கேவின் பவர் ஹிட்டர்கள் பவர் இல்லாத ஹிட்டர்களாக்கப்பட்டனர்.
ரஹானே அவுட் ஆன பந்து 105 கிமீ வேக ஸ்லோ பந்து. மிட்செலுக்கு நட்டு வீசிய பந்து நின்று வந்தது. தோனி இறங்கினார் 2 பந்துகளை மட்டுமே சந்தித்தார் எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடிக்கும் தோனி 1 ரன்னையே எடுக்க முடிந்தது. வீரர்கள் கஷ்டப்படும் போது தோனி முன்னால் இறங்கி வழிகாட்ட வேண்டும், ஆனால் தோனியின் அணுகுமுறை கொஞ்சம் பார்க்க விட்டேத்தியாகவே தெரிகிறது.
மாறாக எஸ்ஆர்எச், பவர் ப்ளேயில் வெளுத்து வாங்கியது. லெக் திசையில் நின்று கொண்டு ட்ராவிஸ் ஹெட் ஆப் திசையில் பந்துகளைப் பறக்க விட்டார். தீபக் சாஹர், துஷார் பவுலிங் எடுபடவில்லை. மொயீன் அலி ஹெட்டிற்கு விட்ட கேட்சை நினைத்து பிற்பாடு வருந்தியிருப்பார். அப்போது ட்ராவிஸ் ஹெட் ரன் எடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அபிஷேக் சர்மா பந்தைப் பார் அடி என்ற வகையைச் சேர்ந்தவர் 37 ரன்களை 300% ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.
முகேஷ் சவுத்ரி என்ற இடது கை பவுலர் வீசிய முதல் ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது. அபிஷேக், ஹெட் ஆட்டமிழந்தவுடன் மார்க்ரம் வந்து பின்னி எடுத்தார். மார்க்ரம், ஷாபாஸ் அகமது ஆட்டமிழக்கும் போது சன் ரைசர்ஸ் கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டது. சிஎஸ்கேவுக்குச் சாதகமான பிட்சைப் போட்டு அவர்களை வீழ்த்திக் காட்டியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
50 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago