கேண்டிடேட்ஸ் செஸ் - முதல் சுற்றை டிரா செய்த இந்திய வீரர்கள்

By செய்திப்பிரிவு

டொராண்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிடொராண்டோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் - விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 21-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்களான ஹிகாரு நகமுரா - ஃபேபியானோ கருனா மோதிய ஆட்டம் 41-வது நகர்த்தலின் போதும் ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரானநிஜாத் அபாசோவ் மோதிய ஆட்டம் 34-வது நகர்த்தலின் போதும் டிராவில் முடிவடைந்தது. முதல் சுற்றின் முடிவில் 8 வீரர்களுமே தலா 0.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். மகளிர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி - ஆர்.வைஷாலி மோதிய ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்