ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 165 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை சிஎஸ்கேவின் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் விக்கெட்டானார் ரச்சின். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ருதுராஜ் 8வது ஓவரில் 26 ரன்களுடன் அவுட்டானார். 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 84 ரன்களை சேர்த்திருந்தது.
அஜிங்க்ய ரஹானே - ஷிவம் துபே இணை ரன்களை ஏற்றும் முனைப்பில் இறங்கினர். துபே 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். பாட் கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார் துபே. அரைசதம் மிஸ்ஸிங்!
» “என் பொறுமையை சோதிக்காதீர்கள்” - பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி
» மயங்க் யாதவ் தாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக உம்ரன் மாலிக் தேர்வு?
அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 35 ரன்களில் கிளம்பினார். 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 127 ரன்களைச் சேர்த்திருந்தது. ரவீந்திர ஜடேஜா - டேரில் மிட்செல் பொறுப்பான ஆடினாலும், நடராஜன் வீசிய பந்தில் கடைசி ஓவரில் 13 ரன்களில் அவுட்டானார் மிட்செல்.
இறுதியாக வந்த தோனி 1 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 31 ரன்களுடன் களத்தில் இருக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 165 ரன்களை சேர்த்தது.
ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஷஹபாஸ் அகமது, நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago