டிஎன்பிஎல் டி20 தொடர் ஜூலை 5-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டு சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி வரும் ஜூலை 5-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

லீக் ஆட்டங்கள் திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன. லீக் ஆட்டங்கள் ஜூலை 5 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் தகுதி சுற்று 1, எலிமினேட்டர்) 30 மற்றும் 31-ம் தேதிகளில் நத்தத்தில் நடைபெறுகிறது.

தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5-ம் தேதி சேலத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்