வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நெருங்கி வந்து தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, நமன் திர், டெவால்ட்பிரவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ஆனால்டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் கடைசி கட்டத்தில் குறைந்த ரன்களை எடுக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் மும்பை அணி தோல்வியுற நேரிட்டது.

ஹைதராபாத் அணியுடனான 2-வது போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் 278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ரோஹித், இஷான் கிஷன், நமன் திர், திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக விளையாடியபோதும் வெற்றியை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித், இஷான், நமன் திர், திலக் வர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸை இந்த ஆட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

அதைப் போலவே பும்ரா, பியூஷ் சாவ்லா,ஜெரால்டு கோட்ஸி சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் மும்பை அணியின் வெற்றி எளிதாகும். மேலும் முதல் 2 ஆட்டங்களிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. எனவே தன் மீதான விமர்சனங்களுக்கு இந்தப்போட்டியில் வெற்றியின் வழியாக பதிலளிப்பார் என்று நம்பலாம்.

ஆனால் அதே நேரத்தில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் காண்கிறது. அந்த அணியின் வீரர்கள்யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், கேப்டன் சஞ்சுசாம்சன், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ்ஜூரெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அவர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் மும்பை பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதைப் போலவே பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், அஸ்வின், அவேஷ் கான், யுவேந்திர சாஹல், சந்தீப் சர்மா என வலுவான வரிசையைப் பெற்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என 3 துறைகளிலும் பரிமளித்தால்தான் மும்பை அணிக்கு வெற்றி எளிதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்