புதுடெல்லி: தன் 500-வது போட்டியில் ஆடினார் மே.இ.தீவுகள் வீரர் சுனில் நரைன். ஆனால் இவரது பெயர் இப்போது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் தான் நெருக்கமாகியுள்ளது. சுனில் நரைனுக்கு முன்பாக 500 டி20 போட்டிகளைக் கடந்தவர்கள் மூவர், கெய்ரன் பொலார்ட் 660 டி20 போட்டிகளிலும் டிவைன் பிராவோ 573 டி20 போட்டிகளிலும் ஷோயப் மாலிக் 542 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளனர். ஹெலிகாப்டர் ஷாட் புகழ் தோனியின் பேட்டிங்கையே ஆட்டிப்பார்த்தவர் சுனில் நரைன்.
சுனில் நரைன் 40 ரன்கள் கொடுத்தாலும் அபாயகரமான கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை 15வது ஓவரில் வீழ்த்தி ஆர்சிபியை முடக்கினார். பிறகு பேட்டிங்கில் இறங்கி 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 47 ரன்களை விளாசினார். இவரும் ஃபில் சால்ட்டும் (30) பவர் ப்ளேயிலேயே 85 ரன்கள் பக்கம் குவித்து அங்கேயே ஆர்சிபி வெற்றிக்கனவுக்கு ஆணியறைந்தனர்.
பிறகு வெங்கடேஷ் ஐயர் இறங்கி அதிரடி அரைசதத்துடன் ஆர்சிபியின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார். அடித்த அடியில் 183 ரன்கள் இலக்கு 17வது ஓவரிலேயே காணாமல் போனது.
ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணான பெங்களூருவிலேயே மண்ணைக்கவ்வச் செய்தது கொல்கத்தா. ஆர்சிபி அணியில் விராட் கோலி, நான் எப்படி வேண்டுமானாலும் ஆடுவேன் எனக்கு என் இன்னிங்ஸ்தான் முக்கியம் என்பது போல் ஆடினார்.
» மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் | சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி
» டெல்லி கேபிடல்ஸூடன் இன்று பலப்பரீட்சை: ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே
விராட் கோலி அணிக்காக ஆடுவதை விட தன் சர்வதேச டி20 கரியர் அச்சுறுத்தலுக்குள்ளாகியதைக் கருத்தில் கொண்டும் ஸ்பான்சர்களுக்காகவும் ஆடுவது போல் ஆடுகிறார். 59 பந்துகள் அவர் நின்றார். இதில் 8 ஷாட்கள்தான் ஸ்கோரிங் ஷாட்கள் அதாவது 4 பவுண்டரி, 4 சிக்சர்கள். அதாவது 40 ரன்கள் அவரது ஸ்கோரான 83-ல் 8 பந்துகளில் வந்துள்ளது. 8 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 40 ரன்களை எடுக்க முடிந்தவர் ஏன் மீதி 51 பந்துகளில் வெறும் 43 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பதுதான் கேள்வி.
இப்படிப் பார்ப்பதுதான் இப்போதைய டி20 ஸ்ட்ரைக் ரேட்டின் அளவு கோலாகும். 59 பந்துகளில் 83 ரன்களை எடுத்து விட்டார் ஸ்ட்ரைக் ரேட் 140 என்று முட்டுக் கொடுக்க முடியாது. அதே போல் அவரும் அவுட் ஆகியிருந்தால் ஆர்சிபி ஆகக்கீழ் நிலைக்குச் சென்று விடும் என்ற வாதமும் செல்லுபடியாகாது. ஏனெனில் ஒரு முனையில் இவர் இப்படி ஆடுவதுதான் எதிர்முனையில் ஆடுபவருக்கு அழுத்தத்தை ஏற்றுகிறது என்று கூற முடியும்.
இதே கிளென் மேக்ஸ்வெல் 59 பந்துகள் ஆடியிருந்தால் 100 - 110 ரன்களை விளாசியிருப்பார். கோலியின் இந்த ஸ்லோ தன்மையைத்தான் கேள்விக்குட்படுத்துகின்றனர். ஆனால் அணிக்குத் தேவை என்ன என்பது கோலிக்குப் புரியவில்லை. அவர் ஸ்பான்சர்களுக்காக 20 ஓவர்களும் நிற்கிறார். ஆனால் இவரைப் போன்ற ஒரு பெரிய வீரர் 20 ஓவர் நின்றால் போக வேண்டிய ஸ்கோர் உச்சத்திற்குச் செல்வதில்லை. இது கோலியின் பிரச்சனை, ஆர்சிபியின் பிரச்சனை. நாம் சுனில் நரைனுக்குத் திரும்புவோம்.
டி20களில் சுனில் நரைன் எடுத்த விக்கெட்டுகள் 536. டிவைன் பிராவொ 625 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரஷீத் கான் 566 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இம்ரான் தாஹிர் 502 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
குறைந்தது 2000-க்கும் அதிகமாக பந்துகளை வீசிய பவுலர்களில் சுனில் நரைன் சிக்கன விகிதம் 6.10. இது இரண்டாவது சிறந்த சிக்கன விகிதமாகும். இவருக்கு முன்பாக மே.இ.தீவுகளின் இன்னொரு ஸ்பின்னர் சாமுவேல் பத்ரி 197 டி20 போட்டிகளில் 6.08 என்று சிக்கன விகிதம் வைத்துள்ளார்.
அதேபோல் சுனில் நரைன் வைத்திருக்கும் ஒரு தனித்துவமான சாதனை இதுவரை டி20 போட்டிகளில் 30 மெய்டன்களை வீசியுள்ளார், இதில் இவர்தான் டாப்.
சிஎஸ்கேவின் ஸ்டார் பேட்டராக இருந்த ஷேன் வாட்சனை 9 முறையும் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மாவை 9 முறையும் வீழ்த்தியுள்ளார் சுனில் நரைன். அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை 6 முறையும் மார்டின் கப்திலை 6 முறையும் வீழ்த்தியுள்ளார். அதாவது டி20 போட்டிகளில் 8000+ ரன்களை எடுத்த டாப் வீரர்களை 84 முறை வீழ்த்தியுள்ளார். டிவைன் பிராவோ டாப் வீரர்களை 88 முறை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் புள்ளி விவரங்களில் தலையாய சுவாரஸ்யம் தோனிக்கு எதிரான நரைனின் பந்து வீச்சு திறமையே. நரைனுக்கு எதிராக தோனியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் வெறும் 52.74 தான். இது டி20 கிரிக்கெட்டிலேயே ஒரு பேட்டர் ஒரு பவுலருக்கு எதிராக வைத்திருக்கும் ஆகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட் என்கிறது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரங்கள்.
91 பந்துகளில் தோனியை இருமுறையே நரைன் வீழ்த்தியிருந்தாலும் 2 பவுண்டரிகளைத்தான் தோனி இவரை அடிக்க முடிந்துள்ளது என்பதோடு ஹெலிகாப்டர் ஷாட் புகழ் தோனிக்கு 50 ரன் இல்லாத டாட் பால்களை வீசியுள்ளார் சுனில் நரைன். உண்மையில் டி20 மாஸ்டர்தான் சுனில் நரைன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago