‘ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்’ - ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் 31 ரன்களில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. தோல்விக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.

“டாஸ் வென்ற போது 277 ரன்களை ஹைதராபாத் எடுக்கும் என நினைக்கவில்லை. எங்கள் அணி சார்பில் எப்படி பந்துவீசினோம் என சொல்வதை காட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர் என சொல்லலாம். இந்த விக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் உதவியது. நாங்கள் சில விஷயங்களை செய்து பார்த்திருக்க வேண்டும். இளம் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள அணி எங்களுடையது. நிச்சயம் நாங்கள் பாடம் பெற்றுள்ளோம்.

பந்து பல முறை பவுண்டரி லைனை கடந்து ரசிகர்களை நோக்கி சென்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஓவர்களை வீசி முடிக்க நேரம் எடுக்கும். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு நன்றாகவே இருந்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் க்வெனா மபாகாவுக்கு கொஞ்சம் கேம்டைம் தேவைப்படுகிறது” என ஹர்திக் தெரிவித்தார்.

இந்த ஒரே போட்டியில் பல்வேறு ஐபிஎல் கிரிக்கெட் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச இரண்டாவது இன்னிங்ஸ் ரன்கள் (மும்பை - 246), அதிகபட்ச ரன்கள் (ஹைதராபாத் - 277), அதிகபட்ச சிக்ஸர்கள் - 38 மற்றும் ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக எடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச ரன்கள் (523) போன்றவை இதில் அடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE