கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடைவிதித்ததை எதிர்த்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனு மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக்க கூறி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ அமைப்பு வாழ்நாள் தடைவிதித்து.
இந்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த தீர்ப்பில் ஸ்ரீசாந்த் பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது குறித்து பிசிசிஐ வழக்கறிஞர் சிகே கண்ணா கூறுகையில், “ எங்களுடைய சட்டவல்லுநர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள். அது கிடைத்தவுடன், பதில் 4 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago