அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்குஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டதில் குஜராத் டைட்டன்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்ன.
ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த 2022-ம் ஆண்டுஅறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு முதல் தொடரிலேயே கோப்பையை வென்றுகொடுத்தார். கடந்த சீசனிலும் குஜராத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த சீசனுக்காக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியானது பெரும் தொகைக்கு குஜராத் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் வாங்கியது. இதையடுத்து ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய மும்பை அணியிலேயே தற்போது கேப்டனாக களமிறங்குகிறார் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் இன்று தான்கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறார். இதனால் அவர்,மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோஹித் சர்மா எந்தவித அழுத்தமும் இல்லாமல் மட்டை வீச்சில் கவனம் செலுத்தக்கூடும்.
சூர்யகுமார் யாதவ் இன்னும் முழு உடற்தகுதியை பெறாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கமாட்டார். காயம் காரணமாக விலகி உள்ள தில்ஷன்மதுஷங்காவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி, இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது சந்தேகமே. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான்கிஷன், பிசிசிஐ உடனான மோதலால் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் ஆல்ரவுண்டர்களாக ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும். இவர்களுடன் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் மத்வால், நேஹல் வதேரா ஆகியோரிடம் இருந்தும் சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.
» கேப்டன் பதவியில் நெருக்கடியை உணரவில்லை: சொல்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்
» சேம் கரண் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் @ ஐபிஎல் 2024
குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷுப்மன் கில் அதே பார்மை தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. முகமது ஷமிகாயம் காரணமாக விலகி உள்ளது அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது பலம் சேர்க்கக்கூடும். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago