உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோஷின் கான். இடது கை வேகப்பந்து வீச்சாளர். 25 வயதான இவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்த சீசன் முழுவதும் லக்னோ அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கடந்த 2022 சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய இரண்டு சீசனிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதை இலக்காக வைத்து களம் காண்கிறது. இந்த சீசனுக்காக அந்த அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் அணியை வழிநடத்த உள்ளார். அவர் ஃபிட்டாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரை கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், டிகாக், நிக்கோலஸ் பூரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா போன்றவர்கள் உள்ளனர். குருணல் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் என இருவரும் ஆல்ரவுண்டர்களாக அணியை பேலன்ஸ் செய்கின்றனர். பந்து வீச்சில் ஷிவம் மாவி, ஷமர் ஜோசப், மோஷின் கான், யஷ் தாக்குர், நவீன் உல் ஹக் ஆகியோர் உள்ளனர். அமித் மிஸ்ரா, ரவி பிஷ்னோய் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர்.
இந்த சீசனில் அவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அணியில் அவர் இல்லாததை லக்னோ ஈடு செய்ய வேண்டும். அதேபோல இந்த முறை ராகுல் மிடில் ஆர்டரில் ஆடினால் படிக்கல் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக அணியில் மேட்ச் வின்னர்கள் அதிகம் நிறைந்த அணியாக உள்ளது. அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அதிரடி பாணியில் ஆடும் பேட்ஸ்மேன்கள் அணியில் அதிகம் உள்ளனர்.
மோஷின் கான்: உத்தர பிரதேசத்தின் சாம்பால் பகுதியை சேர்ந்த வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் தனது மாநில அணிக்காக விளையாடி வருகிறார். 2018-ல் சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் அறிமுகமானார். அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கவனமும் ஈர்த்தார். அதே ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இருந்தும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் மும்பையின் வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து ஆட்ட நுணுக்கங்களை அவர் பெற்றார். அடுத்த சில சீசன்களும் மும்பை அணியில் அவர் இடம்பிடித்தார்.
2022 சீசனில் மெகா ஏலத்தில் அவரை லக்னோ அணி வாங்கியது. அந்த சீசனில் 9 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அந்த சீசன் அவருக்கு பிரேக்-த்ரூ சீசனாக அமைந்தது. காயம் காரணமாக கடந்த சீசன் அவருக்கு சுமாரானதாக அமைந்தது. ஆனாலும் லீக் சுற்றில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்களை டிஃபன்ட் செய்து அசத்தினார். அதுவும் டிம் டேவிட், கேமரூன் கிரீன் போன்ற வீரர்களுக்கு எதிராக அவர் அதனை செய்திருந்தார். அதன் மூலம் லக்னோ அணி வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் உ.பி அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அதில் அவரது பவுலிங்க் எக்கானமி 6-க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசக் கூடியவர். பேக் ஆஃப் எ லென்த், ஷார்ட் பிட்ச் மற்றும் யார்க்கர் அதிகம் வீசுவார். மிடில் அண்ட் லெக் லைனில் நூல் பிடித்தது போல வீசும் திறன் கொண்டவர். திடீரென வேகத்தை குறைப்பார். இதை 2022 சீசனில் சிறப்பாக செய்திருந்தார். இதனை இந்த சீசனிலும் தொடரும் பட்சத்தில் அது லக்னோ அணிக்கு பலம் சேர்க்கும்.
முந்தையப் பகுதி: அபிஷேக் சர்மா - ஹைதராபாத் அணியின் நம்பிக்கை | ஐபிஎல் 2024 வல்லவர்கள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago