ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த சீசனில் இருந்து விலகியிருந்தார். கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் இந்த முடிவை அவர் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக குஜராத் அணி கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் வாரியரை ரூ.50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
சந்தீப் வாரியர், ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு அணிக்காக 5 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார் சந்தீப் வாரியர். குஜராத் அணியில் ஏற்கெனவே ஷாருக்கான், சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகிய தமிழக வீரர்கள் உள்ள நிலையில் தற்போது அவர்களுடன் சந்தீப் வாரியரும் இணைந்துள்ளார்.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா விலகியிருந்தார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான குவேனா மபகாவை ரூ.50 லட்சத்துக்கு வாங்கி உள்ளது மும்பை அணி. குவேனா மபகா, சமீபத்தில் முடிவடைந்த யு-19 உலகக் கோப்பை தொடரில் 21 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago