கொல்கத்தா: கொல்கத்தா அணியில் முதன்முதல் இணைந்தபோது, அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் தன்னிடம் கூறியது குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் கம்பீர்.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகர கேப்டன்கள் என எடுத்துக்கொள்ளப்பட்டால் கவுதம் கம்பீர் நிச்சயம் அதில் இடம்பெறுவர். கொல்கத்தா அணியை வழிநடத்திய கம்பீர், அந்த அணியின் தலைவிதியையே மாற்றியவர். 2012, 2014 என இரண்டு சீசன்களில் அந்த அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதுவும் 2012ல் சென்னை மண்ணில் சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
ஓய்வுக்கு பின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து கம்பீர், இந்தமுறை கொல்கத்தா பக்கம் மீண்டும் வந்துள்ளார். கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த அணியின் தலைமைக்குழுவின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளார்.
இவர் தலைமையில்தான் இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா. 3-வது பட்டம் வெல்ல வேண்டும் என்பதற்காக கம்பீரை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் முதல் போட்டிக்காக கொல்கத்தா அணி தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறது.
» “சிஎஸ்கே-வின் எதிரி மும்பை இந்தியன்ஸ் மட்டுமல்ல” - கம்பீரை சுட்டிக்காட்டி அஸ்வின் எச்சரிக்கை
» சர்வதேச வெற்றிகளை சன்ரைசர்ஸ் வெற்றியாக மாற்றுவாரா புதிய கேப்டன் கம்மின்ஸ்?
சமீபத்தில் பயிற்சியில் ஈடுப்பட்ட வீரர்களிடம் பேசிய கம்பீர், "ஐபிஎல்லில் பல சாதனைகளைப் படைத்த அணி கொல்கத்தா. அந்த அணியை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்களின் முழு திறமைகளை இதில் வெளிப்படுத்துங்கள்" என்று உரையாற்றினார்.
தொடர்ந்து கொல்கத்தா அணியில் முதன்முதல் இணைந்தபோது , அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் தன்னிடம் கூறியது குறித்து மனந்திறந்து பேசிய கம்பீர், "என்னைக் கையாளுவது மிகவும் கடினமான காரியம். அதை ஷாருக் நேர்த்தியாகச் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள். 2011-ல் நான் முதன்முதலில் நான் கொல்கத்தா அணியில் சேரும்போது ஷாருக் என்னிடம், 'இது உன்னுடைய அணி. இதை உருவாக்குவதும், உடைத்தெறிவதும் உன் கையில்தான் இருக்கிறது' என்றார்.
அதற்கு பதிலாக, 'என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து நான் வெளியே செல்லும்போது சிறப்பான ஒன்றைச் செய்துவிட்டுதான் செல்வேன்' என்பதை மட்டும் ஷாருக்கிடம் உறுதியளித்தேன்" என்று நெகிழ்வாக கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago