மும்பைக்கு மகுடம் சூட்டுவாரா பாண்டியா? - ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

By பெ.மாரிமுத்து

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வலுவான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறது. 10 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து பெரிய அளவிலான தொகைக்கு டிரேடிங் செய்திருந்தது மும்பை அணி.

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணியுடன்தான் தொடங்கினார். கடந்த 2022-ல் மும்பை அணியில் இருந்து விலகி அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாக சென்றார். அங்கு இரு சீசன்களாக விளையாடிய அவர், தனது ஆல்ரவுண்ட் திறனால் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ள அவர், கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

2022-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை 10-வதுஇடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. எனினும் 2023 சீசனில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 2-வது தகுதி சுற்றில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதுவும், அணியின் எதிர்கால கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு மும்பை அணியானது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி உள்ளது.

கடந்த சீசனில் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாததால் மும்பை அணியின் பந்து வீச்சில் தாக்குதல் காணப்படவில்லை. இம்முறை அவர் முழு உடற்தகுதியுடன் திரும்பி உள்ளது வலுசேர்க்கக்கூடும். மேலும் ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஆகாஷ் மத்வால் ஆகியோரது பந்து வீச்சும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளர்களான தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி, இலங்கையின் தில்ஷான் மதுஷங்கா, நுவான் துஷாரா மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான முகமது நபி, ஸ்ரேயஸ்கோபால் ஆகியோரும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, டெவால்ட் பிரேவிஸ் என பெரிய பட்டாளமே உள்ளது. இவர்களுடன் ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை மற்றும் வேகப்பந்து வீச்சு தாக்குதல் அனைத்து அணிகளுக்கும் சவால் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இருப்பினும் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பியூஷ் சாவ்லா கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் 25 விக்கெட்கள் வீழ்த்தினார். குமார்கார்த்திகேயா, ஷம்ஸ் முலானி, ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் அணியில் உள்ள போதிலும் இவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த செயல் திறன் வெளிப்படுமா என்பது சந்தேகம்தான்.

எப்படி இருப்பினும் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் மும்பை அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கேப்டன் பொறுப்பு இல்லாததால் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சுதந்திரமாக செயல்படுவதில் தீவிரம் காட்டக்கூடும். இஷான் கிஷன் தேசிய அணியில் இடம்பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதால் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார். சூர்யகுமார் யாதவ், அறுவை சிகிச்சைக்கு பின்னர் களமிறங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்