PSL | சாம்பியன் பட்டம் வென்றது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி!

By செய்திப்பிரிவு

கராச்சி: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் தொடரில் முல்தான் சுல்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி. பிஎஸ்எல் தொடரில் இது அந்த அணி வெல்லும் மூன்றாவது பட்டம்.

கராச்சி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஸ்வான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கான், 57 ரன்கள் எடுத்திருந்தார். இப்திகார் அகமது, 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சார்பில் இமாத் வாசிம், 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விரட்டியது. மார்ட்டின் கப்தில், 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அஸம் கான், 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. அந்த ஓவரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைபட்டது. முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் எடுத்தது. ஐந்தாவது பந்தில் நஸீம் ஷா, 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹுனைன் ஷா பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது இஸ்லாமாபாத் யுனைடெட். அதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த மூன்று சீசன்களாக இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அணியாக முல்தான் சுல்தான் அணி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்