மறக்குமா நெஞ்சம் | ‘தல என்னை அணைத்த தருணம் என்றென்றும் நினைவிருக்கும்’ - ஜடேஜா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 22-ம் தேதி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியுடன் தன்னால் மறக்க முடியாத பொன்னான தருணத்தை ஜடேஜா நினைவுகூர்ந்துள்ளார்.

“வெற்றிக்கு பிறகு அணியின் டக்-அவுட்டை நோக்கி நான் சென்றிருந்தேன். அப்போது ‘தல’ (தோனி) என்னை அணைத்து சுமந்த அந்த தருணம் என்றென்றும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இந்த நினைவுகள் எனது நெஞ்சில் நிறைந்திருக்கும். இது எனது ஆல் டைம் பேவரைட் நினைவுகளில் ஒன்று. லவ் யூ தல” என ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

கடந்த ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வெல்வதற்கான அந்த வெற்றி ரன்களை ஜடேஜா ஸ்கோர் செய்திருந்தார். அதன் மூலம் ஐந்தாவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது சென்னை அணி. அப்போது ஜடேஜாவை தோனி கட்டி அணைத்து, தூக்கி சுமந்தார். அது ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகராலும் மறக்க முடியாத பொன்னான தருணமாகும்.

தற்போது சிஎஸ்கே பகிர்ந்துள்ள அந்த தருணம் குறித்த நினைவுகளை ஜடேஜா விளக்கும் இந்த பதிவிலும் ரசிகர்கள் அதையே சொல்லி உள்ளனர். அதோடு ஆறாவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்ல வாழ்த்துகள் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த சீசன் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்