ஏ.பி.டிவில்லியர்ஸ், ஏ.பி.டிவில்லியர்ஸாக ஆடினால் அபாயகரமானவர்: உற்சாகத்தில் கிறிஸ் மோரிஸ்

By ராமு

தோல்வி மனப்பான்மையில் துவளும் தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாகமூட்ட, அந்த அணியின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வரும் ‘மெசையா’வாக டிவில்லியர்ஸ் பார்க்கப்படுகிறார்.

சமீபமாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா இப்படிப்பட்ட உதைகளை வாங்கியதில்லை. சனிக்கிழமையன்று வாண்டரர்ஸில் 4-வது ஒரு நாள் போட்டிக்கு டிவில்லியர்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியிலும் அழுத்தத்திலும் கூட உற்சாகமடைந்துள்ளது.

டிவில்லியர்ஸ் வருகை குறித்து ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் கூறும்போது, “களத்தில் அவர் இருப்பால் என்ன நன்மை கிடைக்குமோ அதே போல் களத்துக்கு வெளியேயும் அவர் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவராக இருக்கிறார். ரன்களை விட டிவில்லியர்ஸ் இருப்பதே பெரிய தெம்பு, ஏ.பி.டிவில்லியர்ஸ் காரணி என்பதை அவரது இருப்பு அணிக்குக் கொண்டு வருகிறது.

இப்போது நாங்கள் அனைவருமே நெருக்கடியில் இருக்கிறோம். 3-0 பின்னடைவு கண்டுள்ளோம் இதற்கு மேல் என்ன மன அழுத்தம் வேண்டும்? ஏ.பி. வருகிறார் என்றால் அவருக்குக் கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. அவர் ஏ.பி.டிவில்லியர்ஸாக இருக்க வேண்டும். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸாகவே இருந்தால் அவர் அபாயகரமான வீரர்.

நாங்கள் அனைவருமே நன்றாக ஆட செத்துக் கொண்டிருக்கிறோம். எங்களால் என்ன முடியும் என்பதை இந்தப் போட்டியில் காட்டுவோம்” என்றார் கிறிஸ் மோரிஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்