ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும்; இல்லையெனில் நான் தோல்வியடைந்தவனாவேன்: பாண்டிங்

By ஆர்.முத்துக்குமார்

“இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் தொடரை வென்றதில்லை. இந்த முறை நிச்சயம் வெல்லக்கூடிய முறையில் ஆடுவோம். கோப்பையை வெல்லக்கூடிய மாற்றங்களையும் செய்வோம். இந்த முறை அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்” என்று டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விசாகப்பட்டினத்தில் தீவிரப் பயிற்சியில் இருந்து வருகின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட்டும் திரும்பியுள்ளார். நாட்டில் நடைபெறும் பொதுத் தேர்தல்கள் காரணமாக ஐபிஎல் 2024 சில பகுதிகளாக நடத்தப்படும் என்று தெரிகிறது. இரண்டாவது பாதி துபாய்க்கு மாற்றப்படலாம் என்ற செய்திகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் பயிற்சியாளராக அணி வீரர்களைக் கண்காணித்து வரும் பாண்டிங் ஒவ்வொரு வீரருக்கும் தெளிவான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார். பட்டத்தை வெல்ல வீரர்களையும் தன்னையும் ஒரு படி உந்தித் தள்ளிக்கொள்ளப்போவதாகவும் இந்த ஆண்டு பல விஷயங்கள் மாறும் என்றும் பாண்டிங் கூறினார்.

வீரர்களிடம் பாண்டிங் கூறியதாவது: “ஐபிஎல் கோப்பையை வெல்லும் உச்சத்தை நோக்கியே சிந்திக்கிறேன். அதை விட குறைவான ஒன்று என்னை தோல்வியடைந்தவனாகவே காட்டும். ஆம் நான் தோல்வி அடைந்தவனாவேன். நீங்கள் அல்ல, எனக்குத்தான் தோல்வி. ஆகவே கோப்பையை வெல்வதுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் 100%க்கும் மேல் பங்களிக்க வேண்டும்.

என்னுடைய நோக்கமும் பொதுவாக பயிற்சியாளர்களின் நோக்கமும் வீரர்களை, அதாவது உங்களை உயர்த்துவதாகவே இருக்கும். அடுத்து வரும் 10 மாதங்கள் உண்மையில் மகிழ்ச்சிகரமான 10 வாரங்களாகும். இது உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அருமையான வாய்ப்பு.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நான் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியில் பங்களிப்பு செய்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இது கேப்பிடல்ஸுடன் எனது 7வது சீசனாகும் இது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த நிலை இந்த முறை மாறும். மாற வேண்டும். நிச்சயம் விஷயங்கள் வேறுவிதமாகவே இந்த ஐபிஎல் தொடரில் இருக்கும், நானும் வித்தியாசமானவனாகவே இருப்பேன்.

நான் உங்களுடன் கேளிக்கையாக இருக்க விரும்புகிறேன். ஒரு தனி மனிதராக நீங்கள் சிறந்தவரானால் அணியிலும் நீங்கள் சிறப்பு வகிப்பீர்கள். வீரர்களுடன் கேளிக்கையுடனும் நகைச்சுவையுடனும் பழகுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கிரிக்கெட் நேரத்தில் கிரிக்கெட். ஒரு அரைமணி நேரம் இதற்காக ஒதுக்க வேண்டும். கூடுதலாக பங்களிப்பு செய்ய வேண்டுமா என்னை வந்து பாருங்கள்.

உங்கள் வேலை முடிந்தவுடன் நீங்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால் பயிற்சி அமர்வு அப்படி முடிவுறாது. சக வீரர்களுக்கு உதவ வேண்டும். டெல்லி கேப்பிடல்ஸ் சூழ்நிலை இதுதான், இந்த அணியில் பேணப்படும் பண்பாடு இதுதான். இதில்தான் நாங்கள் இந்த முறை முன்னேற்றம் காணப்போகிறோம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்