மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டும் ரோகித் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்திருக்கலாம். ஏனென்றால், ரோகித் இன்னும் இந்திய டி20 அணியை வழிநடத்தி வருகிறார். ரோகித்தை மாற்றிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் நியமித்ததில் மும்பை அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கும் என நினைக்கிறேன்.
இது கடினமான முடிவு என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். குஜராத் டைட்டன்ஸ் போல் மும்பை அணி கிடையாது. மும்பை அணியில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அதனால் மும்பை கேப்டனாக இருப்பது எளிதானது அல்ல. அதிக அழுத்தம் இருக்கும், அதனை எல்லோராலும் சமாளிக்க முடியாது.
ரோகித் இன்னும் 5 - 6 ஆண்டுகள் விளையாடலாம். தோனி ஓய்வுக்கு பின் ரோகித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வேண்டும் என விருப்புகிறேன். ரோகித் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க ஆசைப்படுகிறேன். மும்பை அணிக்காக நீண்ட காலம் விளையாடி பல சாதனைகளை அவர் படைத்துவிட்டார். சென்னை அணிக்காகவும் அதேபோல் ரோகித் செய்தால் சிறப்பாக இருக்கும்.
» நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி; தொடரையும் வென்றது
» ஒலிம்பிக் தகுதிச் சுற்று: இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா தோல்வி
தோனிக்கு பிறகு சென்னை கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி ரோகித்துக்கு உள்ளது. ஆனால் இந்த முடிவை எடுப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இந்த சீசனில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. தற்போது மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. மும்பை பயிற்சியாளருக்கும் ரோகித்தின் மனைவிக்கும் கருத்து மோதல் உண்டானது. எனினும், இந்த விஷயம் குறித்து ரோகித் மவுனம் காத்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago