கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 162 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டாம் லதாம் 38 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 90 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார்.
» நெல்லை அருகே போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி உயிரிழப்பு
» ஆஸ்கர் 2024 | சிறந்த படத்துக்கான விருதை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’
இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 51 ரன்களும், வில் யங் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தை டாம் லதாம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் தொடங்கினர்.
அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த டாம் லதாம் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடி அரை சதமடித்தார் ரச்சின் ரவீந்திரா. அவருக்கு உறுதுணையாக விளையாடிய டேரில் மிட்செல் 58 ரன்கள் குவித்து, ஹேசில்வுட் பந்தில் வீழ்ந்தார். ரச்சின் ரவீந்திரா 153 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து (10 பவுண்டரிகள்) கம்மின்ஸ் பந்தில், அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
டாம் பிளண்டல் 9, கிளென் பிலிப்ஸ் 16, குக்கெலின் 44, டிம் சவுத்தி 0, மேட் ஹென்றி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 108.2 ஓவர்களில் 372 ரன்களுக்கு நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4, நேதன் லயன் 3, மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் மேட் ஹென்றி, பென் சியர்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியின் 4 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
ஸ்டீவன் ஸ்மித் 9, உஸ்மான் கவாஜா 11, மார்னஷ் லபுஷேன் 6, கேமரூன் கிரீன் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 34 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற மோசமான நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.
அதன் பிறகு 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் என்ற நிலையில் உள்ளது. டிராவிஸ் ஹெட் 17, மிட்செல் மார்ஷ் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
மேட் ஹென்றி, பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் மேலும் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.
ஹெட், 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை சவுதி வெளியேற்றினார். இருந்தும் அலெக்ஸ் கேரியோடு இணைந்து 140 ரன்களுக்கு அபார கூட்டணி அமைத்தார் மார்ஷ். 102 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த அவர், பென் சியர்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஸ்டார்க், ரன் ஏதும் எடுக்கமால் வெளியேறினார்.
கேப்டன் கம்மின்ஸ் மற்றும் கேரி இணைந்து அபாரமாக ஆடினார். 65 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரி, 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago