துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் ஐசிசி, நேற்று டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. மேலும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி நெருக்கமாக 118 புள்ளி களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டித் தரவரிசையின் அணிப் பிரிவில் 266 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 256 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் இந்திய அணி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை முதலிடத்தில் இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்திருந்தது. இதனால் தரவரிசையில் பின்தங்கிவிட்டது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago