இந்திய அணி வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’ - டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தியது பிசிசிஐ

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் போட்டிக்கான ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில்,“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வீரர்களின் நிலையான வருவாய்க்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். 2022-23 சீசன் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். போட்டி ஊதியத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதன்படி உதாரணமாக ஒரு சீசனில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் இதில் 4 போட்டிகளுக்கு குறைந்த அளவில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாது.

50 சதவீதத்துக்கு மேல் என்ற அளவில் 5 முதல் 6 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்துக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். விளையாடும் லெவனில் இடம் பெறாத வீரர்களுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத் தொகை கிடைக்கும். அதேவேளையில் 7 அல்லது அதற்கு அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.45 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். விளையாடும் லெவனில் இடம் பெறாத வீரர் ஊக்கத் தொகையாக ரூ.22.50 லட்சம் பெறுவார்.

இந்த கணக்கீடுகளின்படி கேப்டன் ரோஹித் சர்மா2023-24 சீசனில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த வகையில் அவர், ஊதியமாக ஒரு ஆட்டத்துக்கு ரூ.15 லட்சம் என்ற கணக்கில் ரூ.1.50 கோடி பெறுவார். இத்துடன் ஊக்கத்தொகையாக ரோஹித் சர்மாவுக்கு ரூ.4.5 கோடி வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்