ஆஸ்திரேலியாவிடம் 162 ரன்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து அணி

By செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு டாம் லேதம், வில் யங் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. வில் யங் 14 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டாம் லேதம் 38, ரச்சின்ரவீந்திரா 4 ரன்களில் ஜோஷ்ஹேசில்வுட் பந்தில் வெளியேறினர்.

மதிய உணவு இடைவேளையில் நியூஸிலாந்து அணி 25.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்எடுத்தது. இதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து மேற்கொண்டு 91 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேன்வில்லியம்சன் 17, டேரில் மிட்செல் 4, டாம் பிளண்டல் 22, கிளென் பிலிப்ஸ் 2, ஸ்காட் குகேலின் 0, மேட்ஹென்றி 29, கேப்டன் டிம் சவுதி26 ரன்களில் நடையை கட்ட நியூஸிலாந்து அணி 45.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் கவனத்தை ஈர்க்கத் தவறினர்.

நியூஸிலாந்து அணி 107 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. 9-வது விக்கெட்டுக்கு டிம் சவுதி, மேட் ஹென்றி ஜோடியாக 55 ரன்கள் சேர்த்ததால் நியூஸிலாந்து அணியால் 160 ரன்களை தொட முடிந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5, மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 36 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 11, உஸ்மான் காவாஜா 16, கேமரூன் கிரீன் 25, டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 45, நேதன் லயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE