பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா - நியூஸி. ஜூலை 27-ல் மோதல்

By செய்திப்பிரிவு

லாசன்னே: ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் நியூஸிலாந்து, அர்ஜெண்டினா, அயர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 27-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. தொடர்ந்து 29-ம் தேதி அர்ஜெண்டினாவுடனும், 30-ம் தேதி அயர்லாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதன் பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி பெல்ஜியத்தையும், 2-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE