இந்தியா-இங்கிலாந்து 2-வது ஆட்டம்: கார்டிப்பில் இன்று நடைபெறுகிறது

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் கார்டிப்பில் இன்று நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்டு விமர்சனத்துக்குள்ளான நிலையில், இப்போது 2015 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக ஃபிளெட்சரே நீடிப்பார் எனக்கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் இந்திய கேப்டன் தோனி, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதேபோல் ஆடும் லெவனை தேர்வு செய்வதிலும் தோனிக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

இந்திய அணி ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, அம்பட்டி ராயுடு, ரஹானே, ரெய்னா, தோனி என 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் இடத்தைப் பொறுத்தவரையில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோஹித் சர்மா அல்லது உமேஷ் யாதவ் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் ஜொலிக்காத ரோஹித்-தவன் ஜோடி, இந்தப் போட்டியில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பது அவசியம். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் விராட் கோலி, ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்துள்ள அந்த அணி, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் கேப்டன் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் பெல், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோரும், பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல் ஆகியோரும் இங்கிலாந்துக்கு பலம் சேர்க்கின்றனர்.

மிரட்டும் மழை

கார்டிப்பில் இன்று மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்ஜு சாம்சன், அஸ்வின், ஜடேஜா, கரண் சர்மா, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, தவல் குல்கர்னி, புவனேஸ்வர் குமார்.

இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஃபின், ஹரி கர்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயோன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்