வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நேதன் லயன் அபார பந்துவீச்சு: 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைச் சாய்த்தார்.

நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 174 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 179ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71, மேட்ஹென்றி 42, டாம் பிளண்டடெல் 33 ரன்கள் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியா 204 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

இருந்தபோதும் நியூஸிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி 51.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேதன் லயன் 41, உஸ்மான் கவாஜா 28, கேமரூன் கிரீன் 34,டிராவிஸ் ஹெட் 29, மிட்செல் மார்ஷ் 0, அலெக்ஸ் கேரி 3, மிட்செல் ஸ்டார்க் 12, பாட் கம்மின்ஸ் 8 ரன்கள் சேர்த்தனர்.

நியூஸிலாந்து அணி தரப்பில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி 3, டிம் சவுதி 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதையடுத்து 369 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை ரச்சின் ரவீந்திரா 56 ரன்களுடனும், டேரில் மிட்செல் 12 ரன்களுடனும் தொடங்கினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவை 59 ரன்களில் வெளியேற்றினார் நேதன்லயன். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

மறுமுனையில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த டேரில் மிட்செலை, ஜோஷ் ஹேசில்வுட் 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் நேதன் லயன், கிரீன், ஹேசில்வுட் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டினர்.

டாம் பிளண்டல் 0, கிளென் பிலிப்ஸ் 1, ஸ்காட் குக்கெலிஜின் 26, மேட் ஹென்றி 14, கேப்டன் டிம் சவுத்தி 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். வில்லியம் ஓ ரூர்கி மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸானது 64.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களையும், டிராவிஸ் ஹெட்,கேமரூன் கிரீன் ஆகியோர்தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியையடுத்து 2 போட்டிகள் கொண்ட இந்தடெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்றகணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதமடித்த கேமரூன் கிரீன் தேர்வு செய்யப்பட்டார்.

2-வது டெஸ்ட் போட்டி: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 8-ம் தேதி முதல் 12-ம்தேதி வரை கிறைஸ்ட் சர்ச்சிலுள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்