புதுடெல்லி: நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
நியூஸிலாந்தில், ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன்மூலம், ஐசிசி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து, 60 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்த இந்தியகிரிக்கெட் அணி 64.58 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 59.09 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
தரம்சாலாவில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட்போட்டி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியடைந்தால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago