சென்னை: இந்தியா சிமெண்ட் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐசிபிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ், காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய காரைக்குடி அணி 12 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், தமிழக வீரருமான கே. ஸ்ரீ வாசுதேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago