கால்பந்து சற்று சோர்வாக இருக்கிறது: தனது செய்கைக்கு நியாயம் கற்பித்த நெய்மர்

By ஏஎஃப்பி

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் சமீபத்திய போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தன் செய்கையால் சர்ச்சையில் சிக்கினார்.

ரெனிஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது எதிரணி வீரர் ஹமாரி த்ரோர் மைதானத்தில் விழுந்து விட்டார், அப்போது நெய்மர் தன் கையைக் கொடுத்து அவருக்கு உதவுமாறு சென்று விட்டு பிறகு திடீரென கையை விலக்கிக் கொண்டார். இது விளையாட்டு உணர்வுக்கு அழகல்ல என்ற விமர்சனம் நெய்மர் மீது எழுந்துள்ளது.

போட்டியில் நெய்மர் அணி 3-2 என்று வெற்றி பெற்றது.

ஆனால் நெய்மர் தன் செய்கையை நியாயப்படுத்தும் விதமாகக் கூறும்போது, “கால்பந்து இப்போதெல்லாம் சிறிது சோர்வளிப்பதாக உள்ளது. எதையுமே நாங்கள் செய்ய முடியவில்லை. அனைத்தும் சர்ச்சையாகி விடுகிறது.

உதாரணமாக நான் நகைச்சுவையாகவே அப்படிச் செய்தேன், கையை கொடுத்தேன் பிறகு கையை விலக்கிக் கொண்டேன். இது சர்ச்சையாகிவிட்டது.

இதனை நான் என் நண்பர்களிடம் செய்வதுண்டு. எதிரணியினரிடம் ஏன் செய்யக் கூடாது? அது ஒரு ஜோக்.

அவர்கள் என்னை எத்தனை முறை தடுத்தனர், நான் கால்பந்து ஆடுகிறேன், என்னை அவர்கள் தூண்டி விட்டனர், எனக்கும் அவர்களை என் வழியில் தூண்டி விடுவது எப்படி என்று தெரியும். தடுப்பாட்ட வீரர்கள் என்னை உடல் ரீதியாகத் தடுத்து தூண்டிவிட்டால் நான் மேலும் அவர்களைத் தூண்டி விடுவேன்.

மக்கள் இதைப்பற்றி விமர்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும் அவர்கள் எனக்குப் பதிலாக மைதானத்தில் வந்து ஆடிப்பார்க்க வேண்டும். நான் என் அணியை வெற்றி பெறச் செய்தாக வேண்டும்” என்றார் நெய்மர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்