நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 216 ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டனில் உள்ள ஸ்கைமைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் டேவன் கான்வே 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர்.

216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 17 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 24, டேவிட் வார்னர் 32, கிளென் மேக்ஸ்வெல் 25, ஜோஷ் இங்லிஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவையாக இருந்தது. லாக்கி பெர்குசன் வீசிய 18-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் சிக்ஸர் ஒன்றை விளாச அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது.

ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரை டிம் டேவிட் பதம்பார்த்தார். இந்த ஓவரில் டிம் டேவிட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாச 19 ரன்கள் கிடைக்கப்பெற்றது. டிம் சவுதி வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தை டிம் சவுதி வைடாக வீசினார். தொடர்ந்து வீசப்பட்ட 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டது. 4-வது பந்தை டிம் டேவிட் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் டிம் சவுதி யார்க்கர் வீச முயன்றார். ஆனால் பந்து புல்டாசாக மாற டிம் டேவிட் அதை டீப் மிட்விக்கெட், வைடு லாங் ஆன் திசைக்கு இடையில் பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலிய அணி வெற்றிக் கோட்டை கடந்தது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிட்செல் மார்ஷ் 44 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் டிம் டேவிட் 10 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்