முத்தரப்பு டி20; வீணான இங்கிலாந்து வெற்றி: இறுதிப்போட்டிக்கு நியூஸி. தகுதி

By ஏஎஃப்பி

ஹேமில்டனில் இன்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தினாலும் நிகர ரன்விகிதத்தில் நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

ஆனால் 4 போட்டிகள் தொடர் தோல்வியை இங்கிலாந்து நிறுத்தியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுக்க பரபரப்பான விரட்டலில் நியூஸிலாந்து 192/4 என்று தோல்வி தழுவியது.

ஆனால் 19-வது ஓவரில் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகித அடிப்படையில் இங்கிலாந்தைக் கடந்ததால் அப்போதே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது, இருந்தாலும் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூஸிலாந்து 9 ரன்களையே எடுக்க முடிந்தது.

இலக்கை விரட்டும் போது கொலின் மன்ரோ இன்றும் அதிரடி மூடில் இருந்தார். 18 பந்துகளில் 50 எடுத்த அவர் 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அடில் ரஷீத்திடம் ஆட்டமிழந்தாலும் நியூசிலாந்து ரன் விகிதம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது.

மார்டின் கப்தில் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார், மன்ரோ தன் 57 ரன்களில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசினார்.

இங்கிலாந்து முதலில் ஜேசன் ராயின் (21) அதிரடி மூலம் நல்ல தொடக்கத்தைக் கண்டது, ஆனால் டிம் சவுதி 2 விக்கெட்டுகளைச் சாய்க்க (2/22) டேவிட் மலான், மோர்கன் அணியை நிலை நிறுத்தும் வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. டேவிட் மலான் 32 பந்துகளில் அரைசதம் கண்டார். அதாவது ஃப்ரீ ஹிட் ஒன்றை மைதானத்துக்கு வெளியே அடித்தார். ஆனாள் அதன் பிறகு டிகிராண்ட் ஹோமிடம் (1/32) ஆட்டமிழந்து வெளியேறினார். 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசி மலான் ஆட்டமிழந்தார்.

மோர்கன் பிறகு சாத்துமுறை செய்தார், அவர் தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார். 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோர்கன். இன்னிங்ஸின் கடைசி பந்தை கிறிஸ் ஜோர்டான் சிக்சருக்குத் துக்க இங்கிலாந்து அணி 194 ரன்களுக்கு வந்தது.

194 ரன்கள் இலக்கு என்பது பேப்பரை கசக்கி எறிந்தாலே மையத்திலிருந்து சிக்ஸ் செல்லும் நியூஸி. மைதானங்களில் ஒன்றுமில்லை என்ற நிலையில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து தோல்வியடைந்தாலும் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகிதத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்ற நிலையே இருந்தது.

ஆனால் கொலின் மன்ரோ வேறு ஒரு மூடில் இருந்தார் பவர்பிளேயின் போதே 7 சிக்சர்களை தூக்கித் தூக்கி அடித்தார். அரைசதத்தை 18 பந்துகளில் எட்டினார்.

களவியூகக் கட்டுப்ப்பாடுகள் முடிந்தவுடன் மோர்கன் ஸ்பின்னர்களிடம் பந்தை அளித்தார். ரஷீத் 3 பந்துகளில் மன்ரோவை வெளியேற்றினார். இவரும் லியாம் டாஸனும் இங்கிலாந்தை வெற்றி வழிக்குத் திருப்பினர்.

இரு ஸ்பின்னர்களும் சேர்ந்து 8 ஓவர்களை வீசினர். இதில் டாசன். கேன் வில்லியம்சை பவுல்டு செய்தார். 7 ஓவர்கள் வரை இவர்கள் இருவரும் ஜோடியாகக் கட்டுப்படுத்தினாலும் டாஸன் தன் கடைசி ஓவரில் 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். நியூஸிலாந்து அணி தாக்குதலை மீண்டும் தொடங்கிய தருணம் அது.

கப்தில் முதலில் நிதானித்து அதன் பிறகு பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார், அரைசதம் கடந்த பிறகு மலானின் நட்பு ரீதியான பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார், ஆனால் இவரிடமே பவுல்டும் ஆனார்.

19வது ஓவர் முதல் பந்தில் நியூஸிலாந்து 175 ரன்களை எட்டியதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசி ஓவரில் கரன் அருமையாக வீசி 12 வெற்றி ரன்களைக் கொடுக்காமல் 9 ரன்களுக்கு மட்டுப்படுத்தி இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.

புதன் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவை ஆக்லாந்தில் எதிர்கொள்கிறது. இந்த முத்தரப்பு டி20 முடிந்த பிறகு நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஹேமில்டனில் நடைபெறுகிறது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்