வெலிங்டன்: வெலிங்டனில் இன்று நியூஸிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்கள் விளாசியும் ஆஸ்திரேலிய அதிரடியில் கடைசி பந்தில் தோல்வி கண்டது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சவுதி வீசிய 20-வது ஓவரில் முதல் 3 பந்துகளில் 4 ரன்களே வந்தன. ஆனால் 4வது பந்து யார்க்கர் வீசும் முயற்சியில் லெக் ஸ்டம்ப் ஃபுல் டாஸாக, டிம் டேவிட் அதனை பவுண்டரிக்கு வெளியே சிக்சருக்கு தூக்கினார். 5வது பந்து யார்க்கர் சரியாக விழுந்தாலும் டிம் டேவிட் டீப் கவரில் தட்டி விட்டு 2 ரன்கள் ஓடினார். கடைசி பந்து வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. கடைசி பந்தும் யார்க்கர் மிஸ் ஆக டிம் டேவிட் அதை அசுரத்தனமாக அடிக்க லெக் திசை பவுண்டரி அருகே பிலிப்ஸ் முழு வீச்சு டைவ் அடித்தும் பந்து பவுண்டரியைக் கடக்க ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.
நல்ல பேட்டிங் பிட்சில் நியூஸிலாந்து கேட்பன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஃபின் ஆலன், டெவன் கான்வே எடுத்த எடுப்பிலேயே சாத்தி எடுக்கத் தொடங்கினர். பவர் ப்ளேவுக்குள் 61 ரன்கள் விளாசப்பட்டது. ஃபின் ஆலன் 17 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தை வெளுக்க நினைத்து மிட் விக்கெட்டில் வார்னரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஸ்டார்க் நன்றாக வீசினார். ஆனால் அவரது கடைசி ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. பாட் கமின்ஸும் அற்புதமாக ஸ்லோயர் பந்துகள், கட்டர்களை வீசி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இவரும் தன் கடைசி ஓவரில் 15 ரன்களை கொடுத்தார்.
ஆனால் டி20 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா, மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி டி20-யில் வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகு இந்தப் போட்டியிலும் 3 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 15 எக்ஸ்ட்ராகளையும் கொடுத்தது. மேலும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் தொடர்ந்து எதிரணியை 200+ ஸ்கோர்களை எடுக்க விட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கான்வே அட்டகாசமாக ஆடி உலகக் கோப்பைக்குப் பிறகு தன் சர்வதேச அரைசதத்தை எடுத்தார். குறிப்பாக பந்துகள் வேகமாக பவுன்சுடன் வரும்போது இவர் ஆடிய பேக் ஃபுட் ஷாட்கள் பிரமாதம். இவரும் ரச்சின் ரவீந்திராவும் 112 ரன்களை சுமார் 10 ஒவர்களில் விளாசினர்.
» ‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ - தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்
» IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | அணியிலிருந்து பும்ரா விடுவிப்பு; கே.எல்.ராகுல் விளையாடவில்லை
முதலில் கமின்ஸின் அட்டகாசமான பவுலிங்கினால் சற்றே மந்தமான ரச்சின் ரவீந்திரா பிறகு தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். ஆடம் ஜாம்பாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். பல பிரமாதமான ஸ்ட்ரோக்குகளினால் ரவீந்திரா 29 பந்துகளில் தன் 2வது டி20 அரைசதத்தை எடுத்து முடித்தார். ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 68 ரன்களை பின்னி எடுக்க, டெவன் கான்வே 46 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 63 ரன்களை எடுத்தார்.
மார்ஷிடம் கான்வே காலியாக, ரச்சின் ரவீந்திராவை கமின்ஸ் வீழ்த்தினார். கிளென் பிலிப்ஸ் 10 பந்துகளில் 19 ரன்களையும் மார்க் சாப்மன் 13 பந்துகளில் 18 ரன்களையும் விளாசி பினிஷிங் டச் கொடுக்க நியூஸிலாந்து 20 ஒவர்களில் 215/3 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 3 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். கிளென் மேக்ஸ்வெல் 2 ஓவர் 32 ரன்கள், ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர் 36 ரன்.
ஆஸ்திரேலியா இலக்கை விரட்டிய போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியில் இடமில்லாததால் டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட் முதல் முறையாக ஓப்பனிங் இறங்கினர். ஹெட் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்களில் மில்னாவிடம் ஆட்டமிழக்க, டேவிட் வார்னர் 20 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து சாண்ட்னரிடம் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் 69/2 என்று இருந்தது. ஆனால் கேப்டன் மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் இணைந்து அடுத்த 3.3 ஓவர்களில் 42 ரன்களை விளாசித்தள்ளினர். கிளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்து அட்டகாசமாக வீசிய லாக்கி பெர்குசனின் 144 கிமீ வேகப் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
10.3 ஓவர்களில் 111/3. ஜாஷ் இங்லிஸ் 20 பந்துகளில் 20 ரன்கள் என்று சொதப்பினார். ஆனால் மிட்செல் மார்ஷ் 29 பந்துகளில் அதிரடி அரைசதம் கண்டார். என்னதான் அடித்தாலும் கடைசியில் 9 பந்துகளில் 32 ரன்கள் என்று நிலைமை கடினமானது. ஆனால் டிம் டேவிட் பவுண்டரி, 2 சிக்சர்கள் என்று வந்தவுடனேயே மட்டையைச் சுழற்ற கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 16 ரன்கள் என்று இருந்தது.
சவுதி கடைசி ஓவரை நன்றாகவே வீசினார். முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் தான் வந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் டாஸ் ஆக அது சிக்சருக்குப் பறந்தது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்னும் போது டிம் டேவிட் அடித்த ஷாட் உண்மையில் ஏதோ மரண அடியாக இருந்தது. பவுண்டரி அருகே 2 பீல்டர்கள் பந்தை நோக்கி வந்த போதும் ஷாட்டின் பவர் காரணமாக பந்து இருவரையும் முந்திக் கொண்டு பவுண்டரியைக் கடந்து சீறிப்பாய்ந்தது.
நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்குசன் அட்டகாசமாக வீசி 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற எல்லோருக்கும் செம சாத்து. சாண்ட்னர் 4 ஓவர் 42 ரன்கள் 2 விக்கெட். ஆட்ட நாயகனார் மிட்செல் மார்ஷ். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago