ரூர்கேலா: ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெறுகிறது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 9 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்களை வழக்கமான நேரங்களில் வென்றது. நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை வசப்படுத்தியது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது.
நெதர்லாந்து அணி 9 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அர்ஜென்டினா 8 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. உலகத் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனதுகடைசி இரு ஆட்டங்களில் 12-வது இடத்தில் உள்ள அயர்லாந்து, 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக போராடியே வெற்றி கண்டது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் அடித்த கோல் காரணமாக இந்திய அணி 1-0 என வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்த நிலையில் நீண்ட நேரம் நடைபெற்ற பெனால்டி ஷூட்அவுட்டில் 8-7 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.
இதனால் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி வழக்கமான நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து 3 புள்ளிகளை முழுமையாக பெறுவதில் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago