உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

By செய்திப்பிரிவு

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.

தென் கொரியாவின் பூசான் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 11-7, 11-3, 11-6 என்ற செட்கணக்கில்ரிம்மாகுஃப்ரா னோவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் தியா சித்தலே 11-6, 10-12, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் ரோசலினா கதீவாவை வீழ்த்தினார். நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா 11-7, 11-4, 11-1 என்ற செட் கணக்கில் மர்ஹபோ மக்தீவாவை தோற்கடித்தார்.

இந்த தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய மகளிர் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் குரூப் 1-ல் 2-வது இடத்தில் உள்ளது. சீனாவிடம் 2-3 என தோல்வி அடைந்திருந்த இந்திய மகளிர் அணியானது 2-வது ஆட்டத்தில் ஹங்கேரியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. தனது கடைசி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி இன்று ஸ்பெயினுடன் மோதுகிறது.

ஆடவர் பிரிவில் இந்திய அணி, கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ஷரத் கமல் 9-11, 11-8, 6-11, 5-11 என்ற செட் கணக்கில் லீ சான் சுவி டம் தோல்வி அடைந்தார்.தேசிய சாம்பியனான ஹர்மீத் தேசாய் 411, 10-12,8-11 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஜாங் வூஜினிடம் வீழ்ந்தார். ஜி.சத்தியன் 5-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள லிம் ஜாங்ஹூனிடம் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்